வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு மிக தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று, விலை குறைவாக கிடைக்கக்கூடியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய பழமாகும் மற்றும் எண்ணற்ற வகைகளைக் கொண்டது. தினமும் ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது உடலுக்கு ரொம்ப நல்லது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியாக எண்ணற்ற வாழைப்பழங்கள் கிடைக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பாபநாசம், தென்காசிகளில் இடங்களில் தேன்வாழை பழம் கிடைக்கிறது. நேந்திரம், அளவில் சிறிய மட்டி வாழைப்பழ வகைகள் கன்னியாகுமரி, கேரளா சுற்றுவட்டாரங்களில் அதிகமாக கிடைக்கிறது, கோவையில் வாழை அதிக ஹெக்டர் அளவில் பயிரிடப்படுகிறது. தர்மபுரி. தேனி. கன்னியாகுமரி இந்த மாதிரி இடங்களிலும் வாழை அதிகமா பயிரிடப்படுகிறது. திருச்சி சுற்றுவட்டாரங்களில் நிறைய வகைகளில் வாழை உள்ளது, இதனால் திருச்சியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஓன்றும் அரசாங்கம் அமைத்துள்ளது.
பொதுவாக வாழைப்பழம் என்றதும் நன்கு கனிந்த தொட்டால் மேன்மையாக இருக்கும் பழமே சிறந்தது என்று நாம் நினைக்கின்றோம் ஆனால் தொட்டால் சற்று கெட்டியாகும் உரித்தால் தோல் வர கூடியதாகவும் கடித்து மென்று சாப்பிடும் அளவுக்கு இருப்பதை நல்ல வாழைப்பழம் சாப்பிடும் பொழுதே இனிப்பும் துவர்ப்பு சுவையும் தெரிய வேண்டும். இதுதான் வாழைப்பழம் சாப்பிட சரியான பருவம் இந்த பருவத்தில் சாப்பிட்டால் தான் பழத்தின் முழு பலனையும் பெற முடியும் பழம் கனிந்து விட்டால் மாவு சத்தும் இனிக்கும் அதிகரித்து விடும் அடுத்து முக்கியமாக இதில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
வாழைப்பழத்தின் பயன்கள்
வயிற்றுப்புண், குடல்புண், வாயு பிரச்சனை, மலச்சிக்கல், உடல் எடை அதிகரிக்க, நரம்பு தளர்த்தி போக்க, நல்ல உறக்கத்திற்கும் வாழைப்பழம் உதவுகின்றது. குறிப்பாக பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, மக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம், குளுக்கோஸ், மற்றும் செரடோனின் போன்ற சத்துக்களை கொண்டது. பொதுவா உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்க கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கலோரிகள் குறைவாக உள்ள வாழைப்பழத்தினை காலை உணவுடன் தினமும் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.
வாழைப்பழத்தின் வகைகள்
1. செவ்வாழை
செவ்வாழை பொட்டாசியம் அதிகம் நிறைந்தது, எது சிறுநீரகக்கற்கள் உண்டாகாமல் தடுக்குகின்றது. ஆண்கள் தினமும் இரண்டு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது.

பெண்களுக்கு மாதவிலக்கு சீராக நடைபெற உதவுகின்றது. எலும்புகளோட ஆரோக்கியத்துக்கு இது ரொம்ப நல்லது அதனால எலும்புகள் உறுதியாக இருக்கணும்னா தொடர்ந்து வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது. நமக்கு இதய நோயிலிருந்து பாதுகாப்பு கொடுக்கிறது புற்றுநோய் தாக்காம நம்ம உடம்ப பாதுகாக்குது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
2. ஏலக்கி வாழைப்பழம்

வைட்டமின் பி6, நார்ச்சத்துக்கள் நிறைந்தது, உடல் சோர்வை போக்குகிறது உண்பதால் உடலுக்கு தேவையான உடனடி ஆற்றல் கிடைக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது, அல்சரை குணப்படுத்தும் உதவுகிறது.
3. ரஸ்தாளி வாழைப்பழம்

இந்த பழம் சாப்பிடுவதால் உடல் நன்கு வலுடன் தென்படும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது சுவை நிறைந்தது. பசியினை போக்கக்கூடியது, சாப்பிட்டவுடன் வயிறு தும் என்று இருக்கும், உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது, பசியினை ஏற்படுத்தாது. உடல் எடையை அதிகரிக்க கூடியது.
4. கற்பூரவள்ளி / தேன் வாழைப்பழம்

கற்பூரவள்ளி வாழைப்பழத்தில் சத்துக்கள் நிறைந்திருக்கு இது உடலில் உள்ள ஜீரண சக்தி அதிகரிக்கிறது, வாழைப்பழங்களில் மிகவும் இனிப்பானது, பொட்டாசியம் சோடியம் வைட்டமின் பி6 கள் அதிக அளவில் கொண்டிருக்கும். இது நாள் முழுக்க சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு உங்களுக்கு தேவையான ஆற்றலை கொடுக்குது மேலும் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு யூஸ் புல்லா இருக்கு வேலை செய்யும் போது சோர்வாகவோ சோர்வாகவோ மன அழுத்தம் ஏற்பட்டாலோ நீங்க தாராளமா இந்த கற்பூரவள்ளி வாழப்பழத்தை சாப்பிடலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கும் ரத்த விருத்திக்கும் மூளையோட வளர்ச்சிக்கும் அதிக அளவு நன்மைகளை கொடுப்பது. தோலில் ஏற்படக்கூடிய சொரி சிரங்கு சொறி சிரங்கு புண்களை விரைவில் ஆற்றல் உதவுது. இதன் தோல்களை சின்ன சின்ன துண்டா வெட்டி மூணு நாலு தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாக கூட பயன்படுத்திக்கலாம்.
5. நேந்திரம் வாழைப்பழம்

மற்ற வாழைப்பழங்களை விட பார்க்க பெரிதாக இருக்கும், ஏராளமான நன்மைகள் கொண்ட இந்த நேந்திரம் பழத்தினை தினமும் ஒன்று சாப்பிட்டால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. ரத்தசோகை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும். அதே போன்று காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நேந்திரன் பலத்துடன் முட்டை ஒன்றும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் காசு நோய் நீங்கி உடல் நன்கு புஷ்டியாகும்.
இதை அல்சர் உள்ளவர்கள் தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வந்தால் குடலில் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாமல் இருப்பதால் குடல் புண்ணை போக்கி குடற்புண் மேலும் வராமலும் காக்கும். அதிகமான பொட்டாசியம் உள்ளதால் தினமும் காலை சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து நேந்திரன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கும் நல்லது இதயத்துடிப்பிற்கும் நல்லது கேட்டுக் கொழுப்பையும் குறைக்கும்.
மிக ஒல்லியாக இருப்பவர்கள் எப்படியாவது குண்டாக வேண்டும் என்று நினைப்பார்கள் அவர்களுக்கு இந்த நேந்திரன் பழம் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்ல வேண்டும் இவர்கள் தினமும் ஒரு நேந்திரன் பழத்தை அவித்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும். முக்கியமாக இது மலச்சிக்கலை போக்கும் செரிமானத்தை அதிகரிக்கும் நரம்பு தளர்ச்சி குணப்படுத்தும் மேலும் நேந்திரன் பழத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் சருமத்தை பளபளப்பாகவும் அதேபோன்று நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். நேந்திரம் காயின் பவுடராக செய்து அதனை குழந்தைகளுக்கு கொடுப்பதினால் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
6. மலை வாழைப்பழம்

மலை வாழை பசியை தூண்டும், இரத்த சோகையை போக்கும், நீர்ச்சத்து அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கலை போக்கும். இந்த வாழைப்பழம் அளவில் சின்னதா இருக்கும். குழந்தைங்களிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் இது கொடுக்கலாம். சுவையாக இருக்கும் இந்த பழத்தின் தோல் சீக்கிரம் கருப்பாயிடும், கருப்பானாலும் இந்த பழம் வீணாகாது பழம் நல்லா இருக்கும். இந்த பழம் வந்து பத்து நாள் வரைக்கும் நல்லா இருக்கும் சீக்கிரமா கெட்டுப் போகாது.
7. பூவம் வாழைப்பழம்

வாழைப்பழங்களில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த பலன் தரக்கூடியது பூவன் வாழை அதற்குக் காரணம் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து அதிகம். அன்றாடம் உட்கொண்டு வருவதன் மூலம் மூலநோயின் பாதிப்புகளை குறைக்க செய்கிறது. அனைவரும் சாப்பிடக் கூடியது வாதம் வந்தவர்கள் தவிர்ப்பது நல்லது, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியது.
ஞாபக சக்தியை மேம்படுத்த உதவுகிறது மூளை பகுதிக்கு தேவையான பிராண ஆற்றலை அளித்து மூளை சோர்வடைவதை தடுக்கிறது. உடற்பயிற்சி செய்பவர்கள் தசைகளில் வலிமையை அதிகரிக்கவும் உடல் சோர்வை தடுக்கவும், குழந்தைகளுக்கு தசைகள் மூளை எலும்பு மண்டல ஆரோக்கியத்திற்கும் பூவம் பழத்தை சாப்பிட்டு வருவது சிறந்தது.
8. பேயன் வாழைப்பழம்

இந்த பேயன் வாழைப்பழமும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. முக்கியமாக வயிற்றுப்புண் குடல்புண் இந்த மாதிரி பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த பேயின் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய வயிற்றுப்புண் குடல் புண் போன்றவை விரைவில் ஆறும். அதுபோல சிலருக்கு உடல் அதிக அளவு உஷ்ணமாக இருக்கும் அப்படி உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுக்கு உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி ஏற்படும். பேயன் வாழைப்பழத்தை நன்றாக பழுத்த பிறகு சாப்பிட வேண்டும். இதனுடைய தோல் மிகவும் கட்டியாக இருக்கும். நன்றாக பழுத்த பிறகு அதிக இனிப்பு சுவை கொண்டதாக இந்த பழம் இருக்கும். இது அதிக குளிர்ச்சியை உண்டு பண்ணுவதால் தொடர்ந்து எடுக்கும் பொழுது சளி பிரச்சனை அதிகமாகும்.
உடலில் அதிக குளிர்ச்சி உள்ளவர்கள் மற்றும் சளி பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடக்கூடாது. மிக முக்கியமாக இது மலச்சிக்கலை விரைவாக போக்கக்கூடிய தன்மை கொண்டது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பேயன் பலத்தை நன்றாக கனிந்த பிறகு உபயோகப்படுத்த வேண்டும் தொடர்ந்து இதை உபயோகப்படுத்தும் போது மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் அதிலும் முதியவர்கள் இதை பயன்படுத்தும் பொழுது விரைவில் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
9. மொந்தம் வாழைப்பழம்

அதிக ஊட்டச்சத்துக்களையும் பல்வேறு நன்மைகளையும் தரக்கூடியதுதான் மொந்தம் வாழைப்பழம் நாட்டு வாழைப்பழ வகையைச் சார்ந்தது. இது அளவில் பெரியதாகவும் இதன் தோல் கெட்டித்தன்மையிடனும் இருக்கும் இந்த மொந்தம் வாழைப்பழத்தில் கால்சியம் இரும்புச்சத்து மெக்னீசியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும், உடலில் உள்ள அதிக பித்தத்தை குறைத்து சீராக்கும். அம்மை நோய் உடையவர்கள் இப்படத்தை சாப்பிட்டு வந்தால் அதன் பாதிப்புகள் விரைவில் குறையும். ரத்தசோகை இருப்பவர்கள் இந்த மன்னன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள அதிக இரும்புச்சத்து விட்டமின் சி விட்டமின் பி காம்ப்ளக்ஸ் உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும். இப்பளத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிக அளவு நார்ச்சத்து குடல் இரைப்பையின் செயல்பாட்டினை சீராக்கி செரிமான தன்மையை எளிதாக்குகிறது. உடல் மெலிந்தவர்கள் இப்படத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும் உடல் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க ஏற்றது.
10. பச்சை வாழைப்பழம்

மஞ்சள் நிற வாழைப்பழத்துடன் ஒப்பிடும்போது பச்சை வாழைப்பழத்தில் அதிகம் பொட்டாசியம் சத்து உள்ளது. இரவில் படுக்கும் பொழுது பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதால் கை கால்களில் உள்ள தசைப் பிடிப்பு குணமாகும். அடுத்ததாக வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் புன்னை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு மேலும் இதில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மேலும் ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் பி6 அவசியமான ஒன்றாகும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இந்த விட்டமின் பி6 உதவுகிறது. மேலும் சீரான பற்களின் வளர்ச்சிக்கும் பச்சை வாழைப்பழம் அவசியம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும். எனவே வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும் கோடை காலத்தில் தாரளமாக உண்ணலாம். பச்சை வாழைப்பழத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது கனிந்த உடனேயே சாப்பிட்டு விட வேண்டும். குளிர்ச்சி தன்மையுடையதால் உடல் உஷ்ணம் உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். காச நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா வாத நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடாமல் இருப்பது. நல்லது பித்தத்தை அதிகப்படுத்துவதால் குறைந்த அளவை சாப்பிட வேண்டும்.
பச்சநாடன் வாழைப்பழம்

உடல் சூட்டை தணிக்க உதவும்.
செரிமானத்திற்கு நல்ல நார்ச்சத்து கொண்டது.
பொட்டாசியம் சத்து இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
தசை பிடிப்பு குறைக்க உதவலாம்.
உடலுக்கு சக்தி தரும்.
பழுத்தும் சாப்பிடலாம், காயாகவும் சமையலில் பயன்படுத்தலாம்.
குடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியது.
பாரம்பரியமாக உடல் குளிர்ச்சி தரும் பழமாக கருதப்படுகிறது.










